தலவாக்கலையில் அதிகரிக்கும் மதுபான கடைகள்; மக்கள் விசனம்!

0
129

தலவாக்கலை நகரத்தில் மதுசாலைகளின் தொகை அதிகரித்து வருவதாக இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

தலவாக்கலை நகரத்தின் தூரம் ஒரு கிலோ மீற்றராகும் இந்நகரம் தொடங்கும் இடத்திலிருந்து சென்கிலயர் இடம் வரை 09 மது கடைகள் கடந்த காலங்களில் இயங்கிவந்த போது தற்போது இதன் தொகை 10 ஆக அதிகரித்துள்ளது.

எந்த ஒரு மதுகடையும் மறைவான இடத்தில் இல்லை இதன் காரணமாக இந்நகரத்தில் மதுபோத்தல்களின் விற்பனையும் கலைக்கட்டி காணப்படும் இதேவேளை நாலொன்றுக்கு ஒரு மதுகடையில் 30 ஆயிரம் தொடக்கம் வியாபாரம் நடைபெறுவதாகவும் சம்பள நாட்களில் வியாபாரம் 05 லட்சம் ருபா வரை இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது.

தலவாக்கலை நகரத்தில் எங்கு பார்த்தாலும் பார்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மற்றுமொறு பார் வைபவ ரீதியாக இந்நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது.

இக்கடை பிரதான நகரத்தில் பாதையை கடக்கும் மஞ்சல் நிற கோட்டிற்கு முன்பாக திறக்கபட்டுள்ளது.

மஞ்சல் கோட்டில் செல்லும் பாடசாலை மாணவ மாணவிகள் உட்பட பெண்கள் கடந்து செல்லும் போது மது கடையை பார்க்கவேண்டும் மதுக்கடையில் வைத்து ஆண்கள் மது அருந்துவதால் பாதையில் செல்லும் பொது மக்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

மதுகடை திறப்பதுக்கு அனுமதி வழங்கியவர்கள் எதனை அவதானித்து அனுமதி கொடுத்தார்கள் என கேள்வி எழுப்புகின்றனர்

அத்தோடு மலையக மக்களின் பொருளாதாரத்தினை இலக்கு வைத்து மலையக பகுதிகளில் மதுகடைகளை திறப்பது வேதனை தரும் விடயம் என புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் மலையகத்தில் அமைச்சராக இருந்த தொண்டமான் தற்போது அமைச்சர் பதவியில் இருக்கும் பழணி திகாம்பரம் ஆகியோர் மது கடைகளை மூடுவதாக தெரிவித்து பல ஆர்பாட்டங்களை முன்னெடுத்தனர் அவர்களால் ஒரு மது கடையை கூட மூட நடவடிக்கை எடுக்கமுடியவில்லை மாறாக புதிதாக கடைகள் திறக்கபடுவதை தான் உணரமுடிகின்றது.

எனவே மலையக மக்கள் மீது அன்பு செலுத்துவதாக காட்டிக்கொள்ளும் அரசியல் வாதிகள் மலையக மக்கள் கஸ்டபட்டு
உழைக்கும் பணம் மதுகடைகளுக்கு செல்வதை கண்ணால் பார்த்துகொண்டுயிருக்கின்றார்களே தவிர அதற்கு மாற்று நடவடிக்கை எடுக்கின்றார்களா என்பதினை சிந்திக்கவைக்கின்றது.

எனவே மலையகத்தில் மதுகடைகளை திறப்பதுக்கு அனுமதி வழங்குவதை தடைசெய்வதற்கு மலையகத்தில் உள்ள அரசியல் வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பிரதேச மக்கள் அரசியல் வாதிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

கு.புஸ்பராஜ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here