முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ஹப்புத்தளையில் மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்!!

ஹப்புத்தளையில் மண்சரிவு அபாயம் – 47 குடும்பங்கள் வெளியேற்றம்!!

ஹப்புத்தளையில் மண்சரிவு 47 குடும்பங்கள் வெளியேற்றம்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த வீடமைப்புத் திட்டம் இன்னும் முடியவில்லை!
சீரற்ற வானிலையால் ஹப்புத்தளை – பிட்டரத்மலை பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் இருந்து 100 மீற்றர் பள்ளத்தாக்கிலுள்ள 47 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் தொட்டலாகலை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று முதல் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பிட்டரத்மலை பகுதிக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதி மக்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் இரு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், இன்னும் அந்த வீடுகள் கையளிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும், மண்சரிவு அபாயம் நிலவுவதாகக் கூறப்பட்டுள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோமீற்றர் தொலைவிலேயே புதிய வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக ஹப்புத்தளை செய்தியாளர் கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!