முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்!!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பம்!!

2017, 2018 ம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் நல்லிரவு 12 மணிக்கு 03.12.12017 பூரனை தினத்தில் ஆரம்பமாகியதாக சிவனொளிபதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார்.சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி பெல்மதுலை கல்பொத்தாவல ரஜமகா விகாரையில் வைக்கப்பட்டிருந்த சமன் தேவவிக்கிரமும் பூஜை பொருட்களும் தாங்கிய இரத பவனி அவிசாவளை கினிககத்தேன அட்டன் நோர்வுட் மஸ்கெலியா வழியாக நல்லத்தன்னி சிவனொளிபாத மலையடிவாரத்தை சென்றடைந்தது.

நல்லிரவு 12 மணிக்கு  மலையடிவாரத்தை சென்றடைந்த இரத பவனி விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

DSC07904 DSC07910 DSC07914 DSC07883 DSC07898

சிவபூமிக்கு வருகைத்தரும் உள்நாட்டு வெளிநாட்டு யாத்திரிகள் பூனித பூமியின் புனிதத்தை காக்குமாறும் பிளாஸ்டிக், பொலித்தீன் போன்றவையை கொண்டுவருவதை தவிர்க்குமாறும் தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

DSC07930 DSC07936-1 DSC07940 DSC07971 DSC07972

யாத்திரிகளின் நலன் கருதி விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் அரச மற்றும் தனியார் விசேட போக்குவரத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

 

Leave a Reply

error: Content is protected !!