முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி!

சிறையில் 25 ஆண்டுகள் நிறைவு: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி இன்று பேரணி!

ராஜீவ் காந்தி வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு இன்றோடு 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவர்களை விடுவிக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி, பா.ரஞ்சித், கலையரசன் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் கூட இதில் இணைந்து கொண்டு அவர்களின் விடுதலையை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் விடுதலையை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகளும், அமைப்புகளும் இன்று கோட்டை நோக்கிப் பேரணி நடத்துகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இப்பேரணி மாற்றுப் பாதை ஒன்றில் நடைபெறவுள்ளது.

இது குறித்து பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் செய்தியாளர்களிடம் பேசுகையில், பேரணி திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!