இரண்டு வயது குழந்தையை தும்புத்தடியால் அடித்துக் கொன்ற தாய்!
தும்புத்தடியால் தனது குழுந்தையை அடித்து கொன்ற தாய் ஒருவரையும், அவருடன் இருந்த மற்றுமொரு ஆணையும், பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அத்துருகிரிய பிரதேசத்தில் தன்னுடைய குழுந்தையை தும்புத்தடியால் அடித்து கொன்று சடலத்தை பாழடைந்த இடமொன்றில் புதைத்த சம்பவத்துடன் தொடர்புடைய தாயையும், அவரது கள்ளக்காதலனுமே இவ்வாறு நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மஹியங்களை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும், அவரது கள்ளக் காதலனான கொழும்பைச் சேர்ந்த நபருமே அத்துருகிரிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
CATEGORIES பிரதான செய்திகள்