முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஜூலை மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது! : பரணகம

ஜூலை மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது! : பரணகம

காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் பரணகம ஆணைக்குழு கலைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி கலைக்கப்படவுள்ளதாக அதன் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் குறித்து அலுலகம் ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விசாரணைகளை நிறைவு செய்ய எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் வரையில் காலத்தை நீடிக்குமாறு ஆணைக்குழு கோரியிருந்தது.

எனினும், அதனை எதிர்வரும் மாதத்துடன், கலைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம், தங்களின் விசாரணை அறிக்கையை காணாமல் போனோர் அலுவலகத்தில் கையளிக்க இருப்பதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!