முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி!

நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேர்க்கு நேர் மோதி விபத்து; வயோதிப பெண் பலி!

நுவரெலியாவில் பஸ்ஸும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து, முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் கொல்லப்பட்டார் சாரதி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து நுவரெலியா சீதாவனராமய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவில் இருந்து லக்கிலேன்ட் பகுதிக்கு பயணித்த பஸ்ஸும் பண்டாரவலையில் இருந்து நுவரெலியா நோக்கி வந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இன்று மாலை ஏற்பட்ட இந்த விபத்தில் 62 வயதுடைய சிவனு வேலுசாமி என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என தெரியவருகிறது.

படுகாயமுற்ற முச்சக்கரவண்டி சாரதி கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார், நுவரெலிய பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

க.கிஷாந்தன்

 

Leave a Reply

error: Content is protected !!