முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > அரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்!

அரசுக்கு எதிராக ஒன்றிணைகிறது பல தொழிற்சங்கங்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்த உள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர் சமீர கொஸ்வத்த தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சமீர கொஸ்வத்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட சமீர, சிறையில் உள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும், குமார் குணரட்னத்தின் குடியுரிமையினை உடனடியாக வழங்கக் கோரியும், அடக்கு முறையான சட்டதிட்டங்களை உடன் நீக்கக் கோரியுமே இந்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான போராட்டங்களுக்காக பலதொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துள்ளதாகவும், தமது கோரிக்கைகளுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படப் போவதாகவும் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply

error: Content is protected !!