முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > விளையாட்டு > ICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்! : திலங்க சுமதிபால

ICC இடம் முறையிடுகிறது இலங்கை கிரிக்கெட்! : திலங்க சுமதிபால

நுவான் பிரதீப் வீசிய பந்து, தவறான முறையில் முறையற்ற பந்தாக அழைக்கப்பட்டமை குறித்து, சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

இந்தச் சுற்றுலாவில் இடம்பெற்ற அணி முகாமைத்துவம், இந்த முடிவு குறித்து மிகவும் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்த சுமதிபால, அது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபையிடம் முறையிடவுள்ளதாகத் தெரிவித்தார்.

அத்தோடு, இந்த முடிவை, ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார். குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டதும், இலங்கையின் தேசியக் கொடியை, இலங்கையின் அணி முகாமைத்துவத்தினர், அணி தங்கியிருந்த மேல் மாடத்தில் காட்சிப்படுத்தினர்.

எனினும், லோர்ட்ஸ் மைதானத்தில் கொடிகளின் பயன்பாட்டுக்குத் தடை காணப்படுவதாக, லோர்ட்ஸ் மைதானத்தை நிர்வகிக்கும் எம்.சி.சி அறிவித்ததைத் தொடர்ந்து, அந்தக் கொடியை, இலங்கை அணியினர் அகற்றியிருந்தனர்.

இலங்கை வீரர்கள் போராடிய போதிலும், இலங்கை வீரர்களுக்கு அதிர்ஷ்டம் காணப்பட்டிருக்கவில்லையென உணர்ந்ததாகத் தெரிவித்த பயிற்றுநர் கிரஹம் போர்ட், வீரர்களுக்குத் தங்களது ஆதரவு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தவே, தேசியக் கொடியைக் காட்சிப்படுத்தியதாகத் தெரிவித்தார்.

ஆனால், திலங்க சுமதிபால, அதற்கு மாறான கருத்தை வெளிப்படுத்தினார். ‘தேசியக் கொடியென்பது, ஒரு குறியீடு. அந்தத் தீர்ப்புக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியில்லை என்பதைக் காட்டவே அது” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle