முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > கினிகத்தேனை பகதுல காபட் கலவை தயாரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கினிகத்தேனை பகதுல காபட் கலவை தயாரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கினிகத்தேனை பகதுல பிரதேசத்தில் அமைந்துள்ள காபட் கலவை தயாரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்படைவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மத்திய மாகாண நொடுஞ்சாலைகள் அதிகார சபையினால் நிருவகிக்கப்படுகின்ற இந்த நிலையத்தில் தார் பீப்பாய்கள் உருக்கப்படுவதால் அவற்றிலிருந்து வெளியேறும் புகை அயலிலுள்ள வீடுகளுக்குச் செல்வதால் குடியிருப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதேச மக்கள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்துக்குக் கொண்டு வந்ததைத் தொடர்ந்து அவ்விடத்துக்கு விஜயம் செய்த அவர் நிலைமைகளை ஆராய்துள்ளார்.

இந்தப் பிரச்சினைத் தொடர்பாக அம்பகமுவ பிரதேச செயலாளரின் கவனத்துக் கொண்டு சென்ற மத்திய மாகாணசபை உறுப்பினரிடம் தான் பிரதேச செயலகத்தின் சுற்றாடல் பிரிவுக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி வழங்கியுள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்.

Leave a Reply

error: Content is protected !!