முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அபிவிருத்தி செய்ய ஆதரவு வழங்குங்கள்; திலகராஜ் எம்பி!

அபிவிருத்தி செய்ய ஆதரவு வழங்குங்கள்; திலகராஜ் எம்பி!

நுவரெலியாவில் இருந்து கண்டி, கொழும்பு நோக்கிச்செல்லும் புசல்லாவை வரையான பாதையின் இருமருங்கிலும் பல தோட்டங்கள் அமைந்துள்ளன.

மலையக அரசியல் வரலாற்றில் பேர்போன அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடும் இந்த தோட்டங்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. அவை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என திட்டமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டியது பிரதேச மக்களின் கடமையாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட ரஜஎல, ஹெல்பொட, லபுக்கெல்ல வட்டாரங்களுக்கான தேர்தல் பிரசார கூட்டங்கள் அண்மையில் நடைபெற்றது. தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிர்வாக செயலாளர் எஸ். வீரப்பன் தலைமையில் இடம்பெற்ற இந்த பிரசார கூட்டங்களில் ரஜஎல வட்டாரத்தில் போட்டியிடும் தமிழ் கதிரேசன், ஹெல்பொடை வட்டாரத்தில் போட்டியிடும் புஸ்பராஜ், லபுக்கலை வட்டாரத்தில் போட்டியிடும் பட்டதாரி ஆசிரியரான செந்தில்குமார் ஆகியோரை ஆதரித்து இடம்பெற்ற பிரசார கூட்டங்களில் மத்திய மாகாகண சபை உறுப்பினர் ராஜாராம், முன்னாள் அமைச்சர் புத்திரசிகாமணி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் மேற்படி கருத்தினைத் தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொத்மலை பிரதேசம் இலங்கை அரசியல் வாரலாற்றில் முக்கியமான பிரதேசமாகும். குறிப்பாக நுவரெலியாவில் இருந்து கண்டி – கொழும்பு நோக்கி செல்லும் பிரதான வீதயின் இருமருங்கிலும் பல்வேறு தோட்டங்கள் அமைந்துள்ளன. பெருந்தோட்ட கம்பனிகளினால் நிர்வகிக்கப்படும் தோட்டங்கள் அமைந்துள்ள இதே பிரதேசத்தில்தான் பல தனியார் தோட்டங்களும் அமைந்துள்ளன.

இந்த தோட்டங்களில் வாழும் மக்களின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு விடயங்கள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெதமுல்ல வீடமைப்புத் திட்டத்தை நிறைவு செய்துள்ளதோடு, முடக்கப்பட்டுக்கிடந்த இந்திய வீடமைப்புத்திட்டமான ஹெல்பொடை வீடமைப்புத்திட்டம் தற்போது 100 வீடுகளைக்கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

வௌன்டன், மேமலை பகுதிகளில் இப்போது வீடமைப்புத்திட்டங்கள் அமைச்சர் திகாம்பரத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எதிர்வரும் காலத்தில் லபுக்கலை முதல் புசல்லாவை வரை அமைந்துள்ள ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு வீடமைப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்து பிரதான் வீதியின் இரு மருங்கிலும் அமைந்துள்ள எமது மக்கள் வாழும் இந்த பிரதேசத்தை கௌரவமான நிலைக்கு உயர்த்த வேண்டும் என்பதே எமது இலக்காகும். கொத்மலை பிரதேசத்தின் இன்னுமொரு பகுதியான பூண்டடுலோயா பகுதியில் மேற்கொள்ளப்பட்டதுபோல இந்த பிரதேசத்திலும் மேற்கொள்ள நாம் நாம் திட்டம் வகுத்துள்ளோம்.

ஏற்கனவே சிறுபாதைகள், சிறுபாலங்கள் இந்த பிரதேசத்தில் எனது நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இதனை விரிவுபடுத்த பிரதேசசபை உறுப்பினர்களின் தேவை நமக்கு உள்ளது. அதேநேரம் இந்த பிரதேச வாக்குகள் சிதறடையாதவண்ணம் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் முற்போக்கு கூட்டணியும் கூட்டாக இணைந்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன.

பல வருடகாலமாக பாராமுகமாக விடப்பட்டிருந்த இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி இப்போதுதான் சிறுக சிறுக முன்னேற்றப்பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இதனை மேலும் முன்னோக்கிச் செல்வதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சுக்களின் பணிகளை மேலும் இந்த பிரதேசத்திற்குள் கொண்டுவர மக்கள் ஆவண செய்யவேண்டும். அதற்கு மக்கள் தமது ஆதரவை தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle