முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இதொகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு பொகவந்தலாவையில் இடையூறு; ஆறுமுகன் இடையில் வெளியேறினார்!

இதொகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு பொகவந்தலாவையில் இடையூறு; ஆறுமுகன் இடையில் வெளியேறினார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரசார கூட்டம் பொகவந்தலாவ தெரேசிய தோட்டமக்கள் தொழில் புரியும் இடத்திற்கு சென்று இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 23.01.2018.செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டதலைவர் ஒருவரால் இடையூறு செய்து குறித்த தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் இ.தொ.கா பொதுச்செயலாளரை தகாதவார்த்தையில் திட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

vlcsnap-2018-01-23-01h26m24s170vlcsnap-2018-01-23-01h29m17s119vlcsnap-2018-01-23-01h30m10s142

தேர்தல் பிரசாரத்தின்போது இடையூறு விளைவித்து தகாத வார்த்தைகள் பேசி தம்மை அச்சுறுத்தியதாக மேற்படி தோட்டத்தலைவரின் செயல் குறித்து மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்தது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையததிற்கு முறைபாட்டினை பதிவு செய்வதற்கு வந்த மத்திய மாகாணசபை உறுப்பினர் கனபதி கனகராஜிக்கும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களுக்குமிடையில் அமைதியின்மை ஏற்பட்டது .

மத்திய மாகாணசபை உறுப்பினர் கனபதி கனகராஜ் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் இருந்து முறைபாட்டினை பதிவு செய்து விட்டு செல்லும் வரை பொகவந்தலாவ பொலிஸ்நிலைய வளாகத்திற்கு பலத்த பாதுகாப்பும் வழங்கபட்டிருந்தது.

இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு பொதுச்செயலாளர் உட்பட முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டதரனியுமான பி. ராஜதுரையும் கலந்து கொண்டிருந்தவேளை ஏனய தோட்டபகுதிகளுக்கு செல்லவிருந்த பிரச்சார கூட்டத்தினை ரத்து செய்து விட்டு ஆறுமுகன் தொணடமான் வெளியேறினார்.

இதேவேளை பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யபட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தெரேசியா தோட்டதலைவரை அட்டன் நீதவான் முன்னிலையில் அஜபடுத்தபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle