வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்காக செல்லும் பெண்களின் வயதெல்லை குறைக்கப்படக் கூடாது! : ஜேவிபி

0
100

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக செல்லும் பெண்களின் வயதெல்லை குறைக்கும் தீர்மானமானது இடைநிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்லும் பெண்களின் வயதெல்லை குறைக்கும் யோசனையானது கடந்த மாதம் அமைச்சர் தலதா அத்துகோரளவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த யோசனையை இடைநிறுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

தற்போது 25 என்ற வயதெல்லையை 22 ஆக குறைப்பதற்கான யோசனையே கொண்டு வரப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த யோசனைத் தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here