உள்ளுராட்சி சபை தேர்தலில் இ.தொ.கா. நிச்சயம் வெற்றிபெறும்!!

உள்ளுராட்சி சபை தேர்தலில் இ.தொ.கா. நிச்சயம் வெற்றிபெறும்

ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு.

இம் முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலும் மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் நிச்சயமாக வெற்றிபெறும் என்கிறார் இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

25.01.2018. கொட்டகலை தொழிநுட்ப நிலையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார் இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொதுச்செயலாளர் உட்பட மத்திய மாகணா சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் முன்னால் கல்வி அமைச்சர் அனுசியா சிவராஜா இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவரும் முன்னால் கல்வி அமைச்சருமான எஸ்.அருள்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேலும் கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச் செயலாளர் இம்முறை இடம பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்ரஸ் நிச்சயமாக வெற்றிபெறும் என்பதை தெரிந்து கொண்ட மாற்றுகட்சிகள் மூன்று வருடங்கள் கடந்த பின்பு பாரிய நிதிமோசடி குற்றபிரிவுக்கு சென்ற முறைபாடு செய்யபோவதாக கூறுகின்றனர்.

நான் ஒன்று கேட்கிறேன் இவ்வளவு காலம் என்ன தூங்கி கொண்டு இருந்தார்களா? நான் அமைச்சராக இருந்த காலபகுதியில் நான் எந்த வித ஊழல்களும் செய்யவுமில்லை நான் எதற்கு பயப்படதேவையும் இல்லை என தெரிவித்தார்.

இது ஒரு அரசியல் நாடகம் இம் முறை நிச்சயமாக இ.தொ.கா வெற்றி பெறும் என்பதை அறிந்து கொண்ட இவர்கள் மக்களை திசைதிருப்பவதற்காக நிதிமோசடி குற்றபிரிவிற்கு போவதாக கூறிவருகின்றனர்.

இதேவேலை நாங்கள் இன்று மக்களை சந்திக்கபோவும் போது மாற்று கட்சி காரர்களை தூண்டிவிட்டு எங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை குழப்ப நினைக்கின்றார்கள்.

நான் அமைச்சரா இருந்த காலபகுதியில் எனக்கு ஒதுக்கபட்ட நிதி 800மில்லியன் இவர்கள் தேர்தல் ஆட்டம் கண்டதினால் எனக்கு 1300மில்லயன் ஒதுக்கபட்டிந்தாகவும் நான் இதனை மோசடி செய்ததாகவும் கூறிவருகிறார். அதற்கு எனக்கு ஒதுக்கபட்ட 800மில்லியன் ரூபா நிதிக்கு என்னிடம் ஆதாரங்கள் காணபடுகின்ற எனது ஆதாரங்கள் சரியென ஒப்புகொள்ள பட்டபிறகு நிதி மோசடி குற்றபிரிவுக்கு சென்றவர்களுக்கு எதிராக நான் வழக்கு தாக்கல் செய்யதயாரக உள்ளதாகவும் ஆறுமுகன் தொண்டமான் குறிப்பிட்டார் .

இதேவேலை ஊவாமாகாண முதலமைச்சர் மகளிர் பாடசாலை ஒன்றின் அதிபரை முழங்கால் ஈடபட்டது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி ஏழுப்பியபோது இதுபோன்ற குற்றச்சாற்றை ஏற்றுகொள்ளமுடியாது. இதனை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார்.

இதேவேலை எதிர்வரும் 31ம் திகதி ஹட்டன் நகரில் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கபோவதாக நான் அறிந்தேன். நான் ஒன்று கேட்கிறேன் இவர்களுக்கு பதுளையில் ஆர்பாட்டம் செய்வதற்கு இடம் இல்லையா செந்தில் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது ஜனாதிபதி அவர்கள், ஆனால் இவர்கள் பதுளையில் ஆர்பாட்டதினை மேற்கொள்ள முடியாதவர்கள் ஹட்டனில் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொள்ள முயற்சி செய்வதாகவும் கூறிப்பிட்டார்.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்

 224 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!