முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் நகரசபை மாநகரசபையாக மாற்றப்படும்; பைசர் முஸ்தபா தெரிவிப்பு!

அட்டன் நகரசபை மாநகரசபையாக மாற்றப்படும்; பைசர் முஸ்தபா தெரிவிப்பு!

அட்டன் நாகரசபையை மாநகரசபையாகவும் மஸ்கெலியா பிரேதேச சபையை நகரசபையாகவும் மாற்றியமைக்க ஜனாதிபதி மைத்திரீபால சிறீசெனஅவர்கள் உத்தரவு வழங்கியுள்ளதாக மாகாணசபை மற்றும் நகரசபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

27.01.2018.சனிகிழமை கொட்டகலை தொழிற்நுற்ப கேட்போர் கூடத்தில் இலங்கை தொழிலாளர் காஙரசின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் அழைப்பின் பேரின் மக்கள் சந்திப்பில் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்பில் அமைச்சர் ஊட்பட இ.தொ.கா.வின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண மாகாண இந்து கலாசார அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. ராஜதுரை மற்றும் முன்னாள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் அனுசியாசிவராஜா, மற்றும் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது மேலும் உரையாற்றிய அமைச்சர் இன்று நாங்கள் அம்பகமுவ பிரதேசபையை பிரித்து இருக்கின்றோம் இந்த வேண்டுகோளை கடந்த 20,30 வருடங்களுக்கு முன்பு மறைந்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்கள் விடுத்திருந்தார்.

01

அவரின் வேண்டுகோள் இன்றுதான் நிறைவேறியிருக்கிறது எனவும் தெரிவித்தார் நான் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சிலகாலம் நான் இருந்தேன் அதனால் எனக்கு ஆறுமுகன் தொண்டமான் பற்றி நன்றாக தெரியும் மற்றவர் சும்மா இருந்து கொண்டு பெயர் சூடிக் கொள்பவர்கள் ஆனால் ஆறுமுகன் தொண்டமான் அப்படி அல்ல, பெயர்சூட்டிக்கொள்ளும் அரசியல் நிலைக்காது.
ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களுக்கு உண்மையான சேவையினை செய்து வந்தவர் இன்றும் உன்னதமாக சேவையினை செய்து வருகிறார் அவர்தான் இன்றும் என்றும் மலையக மக்களின் ஒரு சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டார்.

சிலர் கூறிவருகிறார்கள் ஜனாதிபதி மைத்திறீபால சிறிசேன்அவர்களுக்கு ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் ஒத்துழைப்ப வழங்கவில்லயென்று ஆனால் மஹிந்த ராஜபாக்ஷவிடம் வாக்குறுதி வாங்கிவிட்டார் ஆனால் வாக்குறுதியை காப்பாற்றும் ஒரே தலைவனும் ஆறுமுகன் தொண்டமான் தான் என தெரிவித்தஅவர் எதிர்வரும் 2020ம் ஆண்டு நாங்கள்தான பாராளுமன்றத்தில் ஆட்சியமைப்பபோம் அன்றும் எங்களோடு பாராளுமன்றத்தில் ஆறுமுகன் தொண்டமான் எம்மோடு கைக்கோர்ப்பார்.

நான் அரசியலை ஆரம்பித்தது ஆறுமுகன் தொண்டைமானோடுதான் இன்று நான் அமைச்சராக இருப்பதற்கு காரணம் அவர்தான்நாடடில் பல அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள் ஆனால் ஆறுமுகன் தொண்டைமானை பற்றி சொல்லவேண்டுமானால் ஜாதி,மதம் பாராமல் மக்களுக்கென சேவையை செய்து வந்தவர் இதேவேளை என்றுமே அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இருப்பவர்; இல்லை சிலர் தோட்ட தொழிலாளர்களை விற்று அரசியல் நடாத்திவருகின்றனர். ஆனால் என்றுமே மக்களுக்காக உழைப்பவர் ஆறுமுகன் தொண்டமான் என குறிப்பிட்டார் .

பொகவந்தலாவ நிருபர்

எஸ்.சதீஸ்

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle