அதிபரை அச்சுறுத்திய முதலமைச்சரையும், அதிகாரிகளையும் உடன்பதவி நீக்கு- மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நுவரெலியாவில்!!

ஆசிரிய சமூகத்துக்கு தலை குனிவை ஏற்படுத்திய ஊவாமாகாண முதலமைச்சரினதும்
அதிகாரிகளினதும் பதவிகள் பறிக்கப்படவேண்டும்.– ஆசிரியர் கூட்டு தொழிற்சங்கக்ங்களின் கோரிக்கை
ஊவாமாகாண பதுளை பெண்கள் கல்லூரியின் அதிபர் திருமதி பவானி யை மண்டியிட்டு மன்னிப்பு கேட்க வைத்த
மாகாண முதலமைச்சர் சாமர தஸநாயக்கவின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆசிரியம் என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு சேவை எனவே ஆசிரியர்களாக சேவையாற்றுபவர்களை
கண்ணியத்துடன் நடத்தவேண்டிய பொறுப்பு சகலருக்கும் இருக்கின்ற நிலையில் ஒரு மாகாணத்தின் முதலமைச்சர்
வரம்பு மீறி ஒரு அதிபரை அவமானத்துக்கு உள்ளாக்கியிருப்பதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
அதிபர் குற்றமிழைத்திருப்பாராயின் அவரின் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு வழிகள்
உள்ளன.அவறையெல்லாம் விடுத்து முதலமைச்சர் சட்டத்தை தானே கையில் எடுத்துகொண்டது ஏற்புடையதல்ல
அதுமட்டுமல்லாமல் பெண் என்றும் பாராமல் முதலமைச்சர் இவ்வாறாக நடந்துக்கொண்ட செயலானது
மிலேச்சதனமானது.

அதேநேரம் அரசியல் வாதிகளுக்கு தாளம் போட்டுக்கொண்டு முதலமைச்சரின் அடாவடி தனங்களுக்கு துணை போன
ஊவாமாகாண கல்வியமைச்சின் செயலாளர் பு.யு.ஆ.ளு.அம்பன்வள மாகாண கல்வி பணிப்பாளர்
சு.ஆ.பியதாஸரத்நாயக்க ஆகியோர் மீதும் சட்ட நடவடிக் கை எடுக்க வேண்டும்.ஏனெனில் அதிபரை மிரட்டி
இவ்விடயம் வெளியில் தெரியாத அளவுக்கு மூடிமறைக்க முற்பட்டவர்கள் இவர்களே அது மட்டுமல்லாமல்
கல்வியமைச்சின் செயலாளர் பு.யு.ஆ.ளு..அம்பன்வளவின் கணவர் ஒரு பொலிஸ் அதிகாரிரூபவ் அவரினூடாகவும்
அதிபருக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பில் மேதகு ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு முதலமைச்சருக்கும் அவருக்கு துணை போனவர்களுக்கும்
தகுந்த ஏற்றுக்கொள்ளகூடிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கல்வி சமூகம் சார்ந்த அனைவரையும்
ஒன்று திரட்டி போராடவேண்டிவரும் என எச்சரித்திருந்த நிலையில் அது தொடர்பில் போதுமான முடிவுகள்
எட்டப்படவில்லை என்தபதால் எதிர்வரும் 06.02.2018அன்று 2.30 மணிக்கு நுவரெலியா தபாற்
கந்தோருக்கு அருகில் அனைத்து ஆசிரியர்கள் அதிபர்கள் ஒன்றிணைந்து இப்போராட்டத்தில்
கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

Ravi sir Teacher union 03-1

 

Web: upcountryteachersfront.blogspot.com
upcountryteachersf wix.com/-

email : upcountryteachersfront@gmail.com

facebook: upcountry.teachersfront@facebook. com Regd No:8494

சி.இரவிந்திரன்.
பொதுச்செயலாளர்
ஜோசப் ஸ்டேலின்
பொதுச்செயலாளர்
இலங்கை ஆசிரியர்சங்கம்

சங்கர்மணிவண்ணன்
பொதுச்செயலாளர்
இலங்கை கல்வி சமூக சம்மேளனம்

;
என்.டி.எஸ்.நாதன்
பொதுச்செயலாளர்;
ஆசிரியர் விடுதலை முன்னணி

; ஜெயசீலன்
பொதுச்செயலாளர்
ஐக்கிய தமிழர் ஆசிரியர் சங்கம்

 86 total views,  1 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!