கொட்டகலையில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து.!!

0
97

கொட்டகலையில் இருந்து அட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி விபத்து.!!

கொட்டகலையில் இருந்து அட்டன் பகுதியை நோக்கி பயணித்த முச்சக்ர வண்டி ஒன்று அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .

இந்த சம்பவம் 12.02.2018. திங்கள் கிழமை பிற்பகல் 02.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

குறித்த முச்சக்கர வண்டி அதிவேகத்தின் காரணமாக வேக்கட்டுபாட்டை இழந்தமையின் காரணமாகவே குறித்த முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகியுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொட்டகலை பகுதியில் இருந்து வந்த முச்சக்கர வண்டி நிறுத்தி வைக்கபட்டிருந்த ஊந்துருளி ஒன்றின் மீது மோதியமை குறிப்பிடதக்கது.

01 06 10

முச்சக்கர வண்டியில் பயணத்த எவருக்கும் எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையென பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனமை குறிப்பிடதக்கது.

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் , ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here