நுவரெலியா மாவட்டத்தில் மலையக தேசிய முன்னணி வரலாற்று சாதனை படைத்துள்ளது!!

0
100

நுவரெலியா மாவட்டத்தில் மலையக தேசிய முன்னணி வரலாற்று சாதனை படைத்துள்ளது

நுவரெலியா மாவட்டத்தில் மலையக தேசிய முன்னணி வரலாற்று சாதனை படைத்துள்ளது என கட்சியின் தலைவரும், கூட்டு எதிர்க்கட்சியின் தமிழ்ப் பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் கட்சி ஈட்டிய வெற்றிகள் குறித்து அவர் கொழும்பில் கருத்துரைக்கையில்…

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக தேசிய முன்னணி ஆட்சியை நிர்ணயம் செய்யும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதான பங்காளிக் கட்சியாக நுவரெலியா மாவட்டத்தில் செயற்படுகின்றது.

முதல் தடவையாக மலையக தேசிய முன்னணி இம்முறை நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் மலர்மொட்டு சின்னத்தில் வேட்பாளர்களை களமிறக்கியிருந்தது.

தேர்தலில் எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பார்கள் அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் பிரதிநிதித்துவம் செய்யக்கூடிய அளவில் வெற்றிகளை ஈட்டிக்கொண்டுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 11 உள்ளுராட்சி மன்றங்களிலும் மலையக தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ஒருவரோ அல்லது ஒன்றுகும் மேற்பட்டவர்களோ வெற்றியீட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஆட்சியை நிர்ணயம் செய்யும் பிரதான பேரம் பேசும் சக்திகளாக திகழ்ந்து வரும் மலையகத்தின் பிரதான அரசியல் கட்சிகள், மிகப் பெரிய தொழிற்சங்கங்களுடன் போட்டியிட்டு எமது கட்சி குறிப்பிடத்தக்களவு வெற்றியை பதிவு செய்துள்ளது.

மலையகத்தின் மூன்றாம் பெரும் சக்தியாக விஸ்வரூப வளர்ச்சியை மலையக தேசிய முன்னணி எட்டிக்கொண்டுள்ளது.

இந்த கடினமான பயணத்தில் சவால்கள், துரோகங்கள், சூழ்ச்சிகள், தடைகள், இடையூறுகள் என சொல்லொனா துயரங்கள் துன்பங்களைக் கடந்து கட்சி இன்று வெற்றிப்பாதையில் ஜொலிப்பதற்கு நேசக்கரம் நீட்டிய அனைத்து உறவுகளுக்கும் சிரம் தாழ்த்தி நன்றி பாராட்டுகின்றோம்.

மலையகத்தில் அரசியல் கட்சி மற்றும் தொழிற்சங்க கலாச்சார மரபுகளை தகர்த்து எறிந்து சமானியர்களின் கட்சியாக, சாதாரண தொழிலாளர்களை தலைவர்களாக்கி அழகு பார்க்கும் முதன்மை சக்தியாக மலையக தேசிய முன்னணி அவதாரம் எடுத்துள்ளது.

பண பலம், அதிகார பலம், சேறு பூசல்கள் இன்றி வாக்களுக்கு ஈடாக மதுபானத்தையோ பணத்தையோ, கட்சியின் கொள்கைகளையோ தாரை வார்க்காது மலையகத்தில் தனித்துவமான ஓர் அரசியல் சக்தியாக மலையக தேசிய முன்னணி குறுகிய காலத்தில் அடைந்துள்ள வளர்ச்சி உங்களுடையது, இந்த வெற்றியையும் மலையக பெருந்தோட்ட சொந்தங்ளாகிய உங்களின் பாதங்களுக்கே கட்சி சமர்பணம் செய்கின்றது.

தேர்தல் பிரச்சாரங்களின் போது எதைக் கூறினோமோ அதனை நிச்சயமாக நாம் செய்து முடிப்போம் என்பதனை உறுதிபடக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றோம்.

வெற்றிக்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி பாராட்டிக் கொள்வதில் கட்சி மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றது என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஊடகப் பிரிவு
மலையக தேசிய முன்னணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here