முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மஹியங்கனையில் சிற்றூர்ந்து ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்து – ஒருவர் மாயம்!!

மஹியங்கனையில் சிற்றூர்ந்து ஒன்று கால்வாயில் வீழ்ந்து விபத்து – ஒருவர் மாயம்!!

மஹியங்கனை மாபாகடவெவ பகுதியில் உள்ள கால்வாயில் சிற்றூர்ந்து ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இன்று காலை கெகிராவை நோக்கி பயணித்த சிற்றூர்ந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Photo (2)Photo (4)

விபத்து இடம்பெற்ற வேளை குறித்த சிற்றூர்ந்தில் பெண்ணொருவர் உட்பட 4 பேர் பயணித்துள்ளனர்.

இந்த சம்பவத்தையடுத்து பெண்ணொருவர் உட்பட 3 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

காணாமல் போயுள்ளவர் மஹியங்கனை பாடசாலை ஒன்றின் ஆசிரியராக பணிப்புரிபவர் என தெரியவந்துள்ளது.

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!