முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > ஆபத்தை எதிர்கொண்டுள்ள சிகிரியா குன்று!

ஆபத்தை எதிர்கொண்டுள்ள சிகிரியா குன்று!

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க சிகிரிய மலைக் குன்று சர்வதேச அந்தஸ்தை இழக்கும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

உலக சொத்தாக யுனெஸ்கோவினால் சிகிரிய மலைக் குன்று பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பகுதி சுற்றுலா பயணிகளின் சொர்க்காபுரியாக மாறியுள்ளதுடன் பொருளாதார துறையில் வளர்ச்சியைடைந்தும் வருகிறது.

அங்கு மனித செயற்பாடுகளின் காரணமாக உலக சொத்து பட்டியலில் இருந்து சிகிரியா நீக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் சிகிரியா பகுதிக்கு சொந்தமான இடைத்தடைப்பகுதியை எல்லையிடும் நடவடிக்கைகளை கடந்த ஒரு வாரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொல்பொருள் பணிப்பாளர் நாயகத்தின் ஆலோசனைக்கமைய, துறைசார் அதிகாரிகளினால் எல்லையிடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சிகிரியாவுக்கு வெளியே இருந்து 180 மீற்றர் வரையிலான பகுதிகளை எல்லையிட்டு, எல்லை கல்லிட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கமைய அங்குள்ள 200க்கும் மேற்பட்ட நிர்மாண பணிகளை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு தசாப்த காலப்பகுதியில் இந்த அவசியமற்ற நிர்மாணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சுற்றுலா விடுதிகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளும் அதற்குள் உள்ளடக்கப்படும் என குறித்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

குறித்த இடங்களை எல்லையிடுவதற்கு அங்கு வசிக்கும் மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும், தற்போது வரையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் எல்லையிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan mersin escort
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle