முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………

அனைத்துலக பெண்களுக்கும் கருடனின் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்………

ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாளான சர்வதேச மகளிர் தினமானது  ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.

இத்தினத்தை பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அவர்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்காமல் சாதனைகளை கொண்டாடும் வகையிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்பது பிரதான நோக்கமாகக் கொள்ளப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்தினத்தை சீனா, ரஷ்யா, பல்கேரியா, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகள் விடுமுறைத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இனம் மொழி கலாசாரம் பொருளாதாரம் அரசியல் ஆகிய பல்வேறு வேறுபாடுகளை மறந்து பெண்கள் தினம் அனைத்து பெண்களாலும் கொண்டாடப்படுகின்றது.

மகளிர் தினத்தின் சுருக்க வரலாறு குறித்து நோக்குவோமாயின்

18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்பக் கல்விகூட தரப்ப டாமல் மறுக்கப்பட்டது. 1857 ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள் தொழிற்சாலைகள் நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது. இது பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பதை உணர்த்தியது.

ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் ஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். ஆனால் அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதியே இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு இடம்பெற்றது. இம்மாநாட்டில் உலகில் பல நாடுகளைச் சேர்ந்த பெண்மணிகள் அமைப்புக்கள் கலந்து கொண்டு தங்களது ஒற்றுமையை உலகுக்கு காட்டினார்கள். இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஜேர்மனியின் கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே மார்ச் 8ஆம் திகதியை மகளிர் தினமாகக் கொண்டாட வேண்டும் என வலியுறுத்தினார். எனினும் பல இடர்பாடுகளால் இத்தீர்மானம் நிறை வேறவில்லை.

அனைத்துலக மகளிர் தினம் க்கான பட முடிவு

1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் திகதியினை உலக மகளிர் தினமாக கொண்டாட வேண்டுமென பிரகடனம் செய்தார். இதனையடுத்து 1921 ஆம் ஆண்டு முதல் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. மேலும் 1975 ஆம் ஆண்டை சர்வதேச மகளிர் ஆண்டாக ஐ.நா. பிரகடனப்படுத்தியது. தொடர்ந்து சர்வ தேச அளவில் பெண்கள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து பெண்கள் நலன் குறித்து சர்வதேச மாநாடுகளுக்கு அது ஊக்குவித்தது.

அனைத்துலக மகளிர் தினம் க்கான பட முடிவு

இச்சந்தர்ப்பத்தில் பெண்ணியம் பெண் விடுதலை பெண் விடுதலை பெண்ணுரிமை போன்ற கருத்துக்கள் குறித்து சிந்தித்தல் அர்த்தமுள்ளதாக இருக்கும். பெண்ணி யத்தை எடுத்து நோக்குமிடத்து ஆண்கள் பெற்றுள்ள சட்டபூர்வமான உரிமைகள் யாவும் சமமாக பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கு உடன் எழுந்தது. அத்தோடு சர்வதேச பெண்கள் தினமானது பெண்ணுக்கு தைரியம் கொடுத்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியுள்ளது. அது மட்டுமல்லாது பெண் விடுதலையின் தாற்பரியம் குறித்தும் சமூக ரீதியான ஒரு புரிந்துணர்வு வேண்டும். பெண் இப்படித்தான் வாழ வேண்டுமென்று வீட்டுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் எழுதாச்சட்டங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டும்.

‘பெண்ணே நீயும் பொங்கியெழு

பயந்தது போதும் துள்ளியெழு

தீமை வந்துனைத் தாக்குகையில்

தீயின் பிழம்பாய் மாறிவிடு’

இன்றைய காலகட்டத்தை பொறுத்தமட்டில் பெண்ணானவள் சகல துறைகளிலும் முன்னேறி வருகிறாள். அடிப்படையில் தன் கனவுகளையும் இலட்சியங்களையும் விதைத்த காலம் மாறி ஆணாதிக்கக் கோட்டைகளை தகர்த்தெறியும் தீப்பிழம்பாய் மாறியுள்ளாள் என்னதான் இலட்சிய வேட்கையை நோக்கி பெண் பயணித்துக்கொண்டிருந்தாலும் சில மானிட பதர்கள் வாழும் இப்பூமியில் வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இவற்றுக்கு கடுமையான சட்டங்களை ஒவ்வொரு நாடும் நடைமுறைப்படுத்துமிடத்து பெண்களுக்கான பாதுகாப்பை ஒவ்வொரு நாடும் உறுதிப்படுத்த முடியும். ஒரு நாட்டில் மட்டுமல்ல குடும்ப பின்னணி தொடக்கம் அனைத்திலுமே பெண்ணுக்கான அடித்தளம் திடமாகவே உள்ளது என்பதால் வெறுமனே சர்வதேச மகளிர் தினத்தில் மட்டுமல்லாது பெண்களுக்கான தனித்துவத்தையும் மரியாதையையும் இச்சமுதாயம் எப்போதும் வழங்க வேண்டும்.

மொத்தத்தில் கடல் போன்ற வாழ்க்கையில் கலங்கரை விளக்குகள் பெண்கள் என்றால் மிகையன்று.

Leave a Reply

error: Content is protected !!