முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில் டிப்பர் லொறி விபத்து – மூவர் படுகாயம்!

பத்தனை குயின்ஸ்பெரி பகுதியில் டிப்பர் லொறி விபத்து – மூவர் படுகாயம்!

http://oceanadesigns.net/edges/ திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியில் 11.03.2018 அன்று இரவு 10 மணியளவில் டிப்பர் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் மூவர் படுங்காயம்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

http://thermograve.co.uk/embed/ பத்தனை குயின்ஸ்பெரி தோட்டப்பகுதியிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சேதன பசளை (சாணம்) ஏற்றிச்சென்ற லொறி குயின்ஸ்பெரி பகுதியில் வாகனத்தை பின்நோக்கி செலுத்தும் போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து டிப்பர் லொறி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

http://research-consulting.com/counting-the-costs-of-open-access-for-institutions-survey-now-open/ DSC03663 DSC03671

விபத்தில் காயமடைந்தவர்களை நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலையத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!