முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 35 வருட கல்வி சேவையிலிருந்து ஒய்வு!

35 வருட கல்வி சேவையிலிருந்து ஒய்வு!

http://adkbrothersltd.com/cart/ நுவரெலியா கல்வி வலயத்தில் உதவி கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய அழகப்பன் சௌந்தரராஜன் தனது 35 வருட கல்வி சேவையிலிருந்து அண்மையில் ஓய்வு பெற்றார்.

buy Lyrica europe தலவாக்கலை கிறேட்வெஸ்டனை பிறப்பிடமாகவும் தலவாக்கலை நகரை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் தனது ஆரம்பக் கல்வியை கிறேட்வெஸ்டன் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திலும்
உயர் கல்வியை அட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் கற்றார்.

source site 1983 ம் ஆண்டு ஆசிரியர் தொழிலில் இணைந்துக் கொண்ட இவர் லிந்துலை ஊவாக்கலை தமிழ்
வித்தியாலயத்தில் கடமையாற்றினார். பின்னர் 1987 ம் ஆண்டு யாழ்ப்பாணம் பலாலி ஆசிரியர் கலாச்சாலையில் ஆசிரியர் பயிற்சியினை பெற்று விவசாய பாட ஆசிரியரானார். வட்டக்கொடை தமிழ் வித்தியாலயம் லிந்துலை சரஸ்வதி தமிழ் வித்தியாலயம் நானுஓயா தமிழ் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார்.

1998 ம் ஆண்டு நுவரெலியா கல்வி வலயத்தில் விவசாய பாட ஆசிரியர் ஆலோசகராக நியமிக்கப்பட்டார் பின்னர் 2000 ம் ஆண்டு முதல் நுவரெலியா கல்வி வலயத்தில் உதவி கல்விப் பணிப்பாளராக நியமனம் பெற்று ஓய்வுபெறும் வரை கடமையாற்றினார்.

இதனிடையே 2007 ம் ஆண்டு முதல் 2009 ம் ஆண்டு வரை சமூக அபிவிருத்தி அமைச்சின் உதவி பணிப்பாளராகவும் கடமையாற்றினார். பல்வேறு நிறுவனங்களினூடாக பல சமூக சேவைகளிலும் ஈடுப்பட்டு மலையக சமூகத்திற்கு பெரும்
பங்காற்றியுள்ளார். இவர் கிறேட்வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த அழகப்பன் மாரியாயி தம்பதியினரின் புதல்வராவார்.

 

தலவாக்கலை பி.கேதீஸ்

Leave a Reply

error: Content is protected !!