முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > ரமீத் ரம்புக்வெலவின் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு தற்காலிக தடை விதிப்பு!!

ரமீத் ரம்புக்வெலவின் சாரதி அனுமதிப்பத்திரத்துக்கு தற்காலிக தடை விதிப்பு!!

நாவல- நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மீது வாகனத்தை மோதி விபத்துக்குள்ளாக்கியமைத் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ரமீத் ரம்புக்வெலவை 5 இலட்ச ரூபாய் சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரங்க கலன்சூரிய இன்று உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்துக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இரவு குறித்த விபத்து சம்பவம் நாவல பகுதியில் இடம்பெற்றமைக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!