அடுத்தமாதம் மலையகப்பட்டதாரிகளுக்கு நியமனம் – மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவிப்பு!!

அடுத்த மாதம் மலையகத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு அரச துறையில் நியமனம் வழங்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், அதற்கான அங்கீகாரத்தினை முதலமைச்சர் வழங்கியிருப்பதாகவும் மத்திய மாகாண தமிழ்க்கல்வியமைச்சர் எம்.ரமேஸ்வரன் தெரிவித்தார்.

கடந்தவருடம் மலையகத்தில் 800 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை பெற்றுக்கொடுத்ததாகவும், தங்கள் ஏனைய அமைச்சின் 1000 க்கும் மேற்பட்டவர்களுக்கு அரச வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்திருப்பதாகவும், நேற்றைய தினம் கூட பல வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்ததாகவும் தெரிவித்த அவர் கடந்த 3 ஆண்டு காலப்பகுதியில் மத்திய மாகாணத்தில் தமிழ்க்கல்வி பாரிய வளர்ச்சியினைக்கண்டுள்ளதாகவும், இவ்வருடம் அதிக பெறுபேறுகளைப்பெற்று பல கல்விவலயங்கள் முன்னணியில் திகழ்வதாகவும் இதற்கு காரணம் தான் அரசியல் பாராது கல்விக்கு முக்கியத்துமளித்து செயற்பட்டதனே எனவும் தெரிவித்தார்.

டயகம கிழக்கு சௌமியமூர்த்தி தொண்டமான் பாடசாலையில் சிகரம் தொடுவோம் எனும் தொனிப்பொருளில் பாடசாலையில் கல்விகற்று பல்வேறு துறையில் சாதனைப்படைத்தவர்களை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் நடராஜா தலைமையில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த கௌரவிப்பு நிகழ்வில் பாடசாலையில் கல்விகற்று பல்வேறு நிறுவனங்களில் தொழில்புரியும் நபர்கள் மற்றும் பாடசாலையில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் பாடசாலை வரலாற்று நூல் ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது

இந்நிகழ்வுக்கு நுவரெலியா கோட்டக்கல்வி பணிப்பாளர் வடிவேல் உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

 199 total views,  2 views today

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )
error: Content is protected !!
bayan escort escort bayan brazzers tecavüz porno altyazili porno porno hikayeleri turbanlı porno escort bayan bayan escort escort bayan mersin escort escort mersin mersin escort bayan