முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கொட்டகலையில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

கொட்டகலையில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு!!

கொட்டகலை பிரதேச பகுதியில் சீத்தா பழ மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு 12.04.2018 அன்று கொட்டகலை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் வழிகாட்டலின் கீழ் சுற்றுப்புறச் சூழலை பாதுகாத்து பழமரச் செய்கையினை ஊக்குவிக்கும் வேலைத்திட்டதின் கீழ் இந்த பழ மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

கொட்டகலை பிரதேச சபையின் தவிசாளர் ராஜமணி பிரசாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்த பழக்கன்றுகளை பயிரிடும் முறை பற்றி செயன்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

01 07

இதன் போது, பிரதி தவிசாளர் எம்.ஜெயகாந்த், ஆரம்ப கைத்தொழில் பிரதி அமைச்சரின் பிரத்யேக செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் இ.தொ.காவின் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!