முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டயகம- தலவாக்கலை பஸ் சேவை மாலை 4.30க்கு நிறுத்தம் மக்கள் விசனம்!

டயகம- தலவாக்கலை பஸ் சேவை மாலை 4.30க்கு நிறுத்தம் மக்கள் விசனம்!

டயகம அக்கரபத்தனை பிரதேசத்தில் மாலை நேரத்தில் பஸ் சேவை இன்மையால் பயணிகள் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

டயகம நகரத்தில் இருந்து மாலை 4.30 மணியளவில் இருதி பஸ் தலவாக்கலை செல்கின்றது. அதன் பின்னர் இப்பாதையில் தனியார் அல்லது அரச பஸ்சேவை இடம்பெறுவதில்லை இதன் காரணமாக வெளி பகுதியில் இருந்து இப்பகுதியில் தொழில் செய்யும் அதிகமானவர்கள் தொழிலை முடித்துவிட்டு தங்களின் வீடுகளுக்கு செல்லமுடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கவேண்டிய நிலை ஏற்படுவதாகவும் பஸ் சேவை இல்லாத காரணத்தால் தனியார் வாகனங்களுக்கு அதிகபடியான கட்டணத்தினை செலுத்தி நேரதாமதமாக வீடுகளுக்கு செல்வதால் குடும்பத்தில் பல இடர்களை சந்திப்பதாகவும் இப்பகுதி பயணிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு டயகம அக்கரபத்தனை மன்றாசி ஹோல்புறூக் திஸ்பனை ஆகிய பகுதிகளில் உள்ள பிரதேச மக்கள் பிரதான நகரங்களில் பேருந்துக்காக காத்திருப்பதை காணமுடிகின்றது.

இதேவேளை டயகம அக்கரபத்தனை போன்ற வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளர்களை மாலை நேரத்தில் பார்வையிட செல்லும் உறவினர்கள் வைத்தியசாலையில் இருந்து மீண்டும் வீடு திரும்ப முடியாமல் வாகனத்திற்காக பாதையில் காத்து நிற்கின்றனர்.

இப்பகுதியில் உள்ளவர்கள் கொழும்பிற்கு செல்வதாக இருந்தால் புகையிரதத்தில் செல்கின்றனர் டயகம நகரத்தில் இருந்து 24 கிலோ மீற்றர் தூரம் கொண்ட தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கே செல்லவேண்டும் தலவாக்கலையில் இருந்து கொழும்பிற்ககு இரவு 11.30 மணியளவில் புகையிரதம் புறப்படுகின்றது.

தோட்டத்தில் தொழில் செய்பவர்கள் தங்களின் தொழிலை மாலை 5.30 மணிக்கே நிறைவுசெய்கின்றனர்.
அதன் பின் அவர்களின் தேவைகளை முடித்துக்கொண்டு தலவாக்கலை புகையிரத நிலையத்திற்கு செல்ல பஸ் சேவை இல்லாத காரணத்தால் இவர்கள் போக்குவரத்திற்காக அதிக பணம் முச்சக்கர வண்டிக்கு செலுத்தவேண்டிய நிலை இருப்பதாக இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பிரதேச மக்களில் நலன் கருதி போக்குவரத்து சேவையை சீர்செய்யும் வகையில் மாலை 5 மணிக்கு பின்னர். டயகம நகரத்திலிருந்து தலவாக்கலை செல்வதற்கு அரச அல்லது தனியார் பேருந்துகளை சேவையில் ஈடுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

துவா.

 

Leave a Reply

malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle