முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அக்கரப்பத்தனையில் ஆட்டோ” விபத்து ” மூவர் படுகாயம்!

அக்கரப்பத்தனையில் ஆட்டோ” விபத்து ” மூவர் படுகாயம்!

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டொரிங்டன் தோட்டப்பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்து ஒன்று (15) ஞாயிற்றுகிழமை இரவு 11.30 மணியலவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சிக்கி படுகாயங்களுக்கு உள்ளான் மூவர் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு அக்கரப்பத்தனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

20180416_005547

அக்கரப்பத்தனை “மோசன்” தோட்டத்திலிருந்து பயணித்துள்ள முச்சக்கரவண்டி டொரிங்டன் தோட்டத்தில் பிரதான வீதியை விட்டு விலகி சுமார் 75 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டி வேக கட்டுப்பாட்டை மீறியே பாதையை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக விபத்துக்குள்ளாகியது தொடர்பில் விசாரணையை மேற்கொண்டுவரும் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையில் பொறுப்பதிகாரி ஆனந்த சிரி தெரிவித்தார்.

வி பந்த் சம்பவத்தை உணர்ந்த டொரிங்டன் தோட்ட பிரதேச வாசிகள் இரவோடு இரவாக படுகாயங்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிதித்துள்ளனர்.

இதன் பின் மேலதிக சிகிச்சைக்காக இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்துள்ளதாக வைத்தியசாலை வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை அக்கரப்பத்தனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!