முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு – பெரும் விபத்து தவிர்ப்பு!

சிங்கப்பூர் – எண்ணெய் கசிவு காரணமாக, இன்று காலை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது ஓடுபாதையில் விமானத்தில் தீப்பற்றியுள்ளது. எனினும், அதிருஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.05 மணியளவில், சாங்கி விமான நிலையத்தில் இருந்து, எஸ்க்யூ368 என்ற விமானம் இத்தாலியின் மிலன் நகரை நோக்கிச் சென்றுள்ளது.

அப்போது பயணிகளில் ஒருவரான லீ பீ யீ (வயது 43) என்பவர், வாயுக் கசிவு போன்ற நெடியை உணர்ந்ததால், உடனடியாக விமானப் பணியாளர்களிடம் தகவல் அளித்துள்ளார்.

அதே நேரத்தில், விமானிகளும், எண்ணெய் கசிவு ஏற்பட்டதை உணர்ந்து, விமானத்தில் எண்ணெய் குறைவான காரணத்தால், சாங்கி விமான நிலையத்திற்கே விமானத்தைத் திருப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் 6.45 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட போது, விமானத்தின் வலது பக்க இறக்கையில் தீ பற்றியுள்ளது.

அதன் பின்னர், தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளன.

இச்சம்பவத்திற்குப் பிறகு, காலை 7.20 மணியளவில் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் ‘தி ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

Leave a Reply

error: Content is protected !!