முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home http://fiona-kerr.com/?author=20 > விளையாட்டு > 3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு!

3வது ஒரு நாள் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வெற்றித் தோல்வியின்றி நிறைவு பெற்றது.
பிரிஸ்டலில் (Bristol) நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.
இதன்படி துடுப்பாடிய  இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களை பெற்றது.
பதிலளித்த இங்கிலாந்து அணி 4 ஓவர்களில் ஒரு விக்கட்டை இழந்து 16 ஓட்டங்களை பெற்றிருந்த போது மழை குறுக்கிட்டது.
இதனை அடுத்து போட்டி முற்றாக கைவிடப்பட்டது.
இதன்படி,  இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்து போட்டிகளை கொண்ட தொடரில், இங்கிலாந்து அணி 1 பூச்சியம் என்ற ரீதியில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
error: Content is protected !!