முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படும் சாத்தியம்!

உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்படும் சாத்தியம்!

சில உள்ளூராட்சி மன்றங்களின் காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

23 உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லை இம் மாதம் 30ம் திகதியுடன் நிறைவடைகின்றன.

முன்னதாக, குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் கால எல்லை கடந்த வருடம் டிசம்பர் 31ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜூன் 30) நீடித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டது.

இந்நிலையில் குறித்த காலப் பகுதியும் நிறைவடையவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், பெரும்பாலும் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான கால எல்லை நீடிக்கப்படலாம் என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வௌியிட்டுள்ளளன.

Leave a Reply

error: Content is protected !!