முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > உதய கம்மன்பில விவகாரம் : இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள்!

உதய கம்மன்பில விவகாரம் : இன்டர்போல் உதவியுடன் விசாரணைகள்!

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முறைகேடு தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவல்துறையினரின் உதவியை பெற்றுக்கொள்ள விசாரணையாளர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியர் ஒருவரின் வங்கிப்பங்கு பத்திரங்களை போலியான முறையில் கைமாற்றி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உதய கம்மன்பில கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் உதய கம்மன்பில மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது சாட்சிகளாக கையொப்பமிட்ட இரண்டு அவுஸ்திரேலிய பிரஜைகளின் வாக்குமூலங்களை பெறுவதற்காகவே சர்வதேச காவல்துறையினரின் உதவி கோரப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!