முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > இலங்கை – உக்ரேனுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கை – உக்ரேனுக்கிடையில் 3 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கும் உக்ரேனுக்குமிடையில் நீதிக்கான ஒத்துழைப்பு துறையில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
நாட்டின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் பவ்லோ கிளிம்கினுக்கும் கடந்த சனிக்கிழமை (25) நடைபெற்ற உரையாடலை தொடர்ந்தே குற்றவியல் விவகாரங்களில் பரஸ்பர சட்ட உதவி, சிறை கைதிகள் பரிமாற்றம், குற்றவாளியை அயல்நாட்டிடம் ஒப்படைப்பு ஆகிய மூன்று விடயங்கள் தொடர்பிலும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் பவ்லோ கிளிம்கினின் விசேட அழைப்பின் பேரிலேயே நாட்டின் வெளிவிகார அமைச்சர் உக்ரேன் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு, இரு நாட்டு முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர், இலங்கைக்கும் உக்ரேனுக்குமிடையில் சிறந்த பலமானதொரு நட்புறவு பேணப்பட்டு வருகின்றது. அத்துடன் யுத்த காலத்தில் நமது நாட்டுக்கு பெருமளவிலான உதவிகளை செய்த நாடுகளில் உக்ரேனும் ஒன்றாகுமென தெரிவித்தார்.

Leave a Reply

error: Content is protected !!