முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > பிரதான செய்திகள் > விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீட்ட ஊவா முதலமைச்சர்!

விபத்தில் சிக்கிய மூன்று பேரை மீட்ட ஊவா முதலமைச்சர்!

இன்று தனமல்வில போதாகம பிரதேசத்தில் பாரிய விபத்தில் சிக்கிய மூவரை உடனடியாக காப்பாற்றி அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தார் ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க.

தனமல்வில போதாகம பிரதேசத்தில் இன்று லொரி ஒன்று வான் ஒன்றுடன் மோதியதால் வானில் பயணித்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்து ஏற்படும் போது அந்த வழியில் வேறு பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஊவா மாகாண முதலமைச்சர் சம்பத் தசநாயக்க காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உதவியுள்ளார்.

முதலமைச்சரின் பாதுகாவலர்கள் விபத்துக்குள்ளான வானின் கதவுகளை உடைத்து காயமடைந்தவர்களை வெளியில் எடுத்து உடனடியாக அவர்களை வைத்தியசாலையில் சேர்த்தனர்.

Leave a Reply

error: Content is protected !!