முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > மலையகம் > அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்!

அக்கரபத்தனை அரச வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் கர்ப்பினித் தாய்மார்கள் அசௌகரிகம்!

அரச பொறுப்பின் கீழ் இயங்கும் மலையக பகுதியில் உள்ள ஆதார வைத்தியசாலைகளில் ஸ்கேன் இயந்திரம் இன்மையால் வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயாளர்கள் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்

குறிப்பாக அக்கரபத்தனை டயகம லிந்துலை ஆகிய வைத்தியசாலைகளில் இக்குறைப்பாடு காணப்படுகின்றது.

இவ்வைத்தியசாலைகளை அதிகமான தோட்ட தொழிலாளர்கள் பயன் படுத்திவருகின்றனர்.

அரச வைத்தியசாலைகளில் இவ்வாறான குறைப்பாடுகள் காரணமாக வைத்திய அதிகாரிகளால் சம்பந்தபட்ட நோயாளர்களை தனியார் மருத்துவ மனைகளுக்கு அனுப்புவதால் அங்கு இவர்கள் அதிகபடியான பணத்தினை செலவு செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதன் காரணமாக பொருளாதார ரீதியாக பாதிக்கபடுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியல் இருந்து கர்ப்பினி தாய்மார்கள் தங்களின் பரிசோதனைகளை மெற்கொள்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கே செல்லவேண்டும்.

இவ்வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் அதிகாலை 4 மணிக்கு செல்வதோடு அவர்கள் ஒரு நாள் சம்பளத்தினை இழந்து போக்குவரத்திற்கு அதிகபணம் செலவுசெய்யவேண்டிய நிலை உள்ளது.

இதேவேளை அதிகமானவர்கள் தனியார் வைத்தியசாலைக்கு சென்று தங்களின் பரிசோதனைகளை மேற்கொள்கின்றனர்.

இப்பிரதேச மக்களின் நலன் கருதி இவ்வைத்தியசாலைகளுக்கு உடனடியாக ஸ்கேன் இயந்திரங்களை சுகாதார அமைச்சு வழங்கவேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

துவா

Leave a Reply

error: Content is protected !!