ஹட்டனில் 187 வீடுகள் அடுத்த வாரமளவில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது!!

0
110

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சசினால் ஹட்டன் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 187 வீடுகள் நிர்மாணப்பனிகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அதை மக்கள் பாவனைக்கு கையளிப்பது தொடர்பிலான கலந்துயாடலொன்று அட்டனில் 10.05.2018 இடம்பெற்றதுகலந்துரையாடலின் போது அடுத்த வாரமளவில் மண்சரிவு தீ விபத்து மற்றும் மண் சரிவு அபாயத்தினை எதிர்கொண்டுள்ள மேபீல்ட் ,இஞ்சற்றி , டில்குற்றி. பம்பரகலை, மானெலி, கெனில்வோர்த், ஹொன்சி, மவூன்வேர்னன் மத்தியபிரிவு, டிக்கோயா, பூல்பேங், புரவூன்லோ ஆகிய தோட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 187 வீடுகள் அடுத்த வாரமளவில் மக்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

அட்டன் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் இடம்பெற்ற இக் கலந்துரையாடலில் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் அமைச்சரின் பிரத்தியேக பணி செயலாளர்கள் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் தோட்ட குடும்ப நல உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதேவேளை எதிர்வரும் 20ம் திகதி டிக்கோயா பூல்பேங் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பி.வி.கந்தையா புரம் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளதோடு பல வருடகாலமாக புனரமைப்பு செய்யப்படாத டீ சைட் தொடங்கி மொக்கா வரையான 8 கிலோமீட்டர் பாதை 3 கோடி ரூபா நிதியொதுக்கீட்டில் அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப பணிகளும் அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here