முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பேருந்துக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை!!

பேருந்துக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை!!

go பேருந்துக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பில் எந்தவிதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்காவின் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

http://sdsignshop.com/wp-json/oembed/1.0/embed?url=http://sdsignshop.com/product/duplex-rider-6%e2%80%b3t-x-18%e2%80%b3w/ ஆனாலும் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பேருந்துக் கட்டணங்களை எவ்வாறு மறுசீரமைப்பது என்பது பற்றி ஆராயப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

go இது தொடர்பாக ஆராய்வதற்கு புத்திஜீவிகள் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தக் குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடி ஆராயும் என்றும் அவர் கூறினார்.

மேலும், பேருந்து கட்டணங்களை மாற்றும் தீர்மானத்தை மேற்கொள்கின்ற அதிகாரம் இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

“இந்த விசேட குழுவில் மொரட்டுவை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வரவு செலவுத்திட்ட திணைக்கள அதிகாரிகள், தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்கள அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் ஆகிய பலதரப்பட்டோரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

error: Content is protected !!