முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > டிக்கோயாவில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

டிக்கோயாவில் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

டிக்கோயா சாஞ்சிமலை மேற்பிரிவு தோட்டத்தில் தோட்ட தொழிலாளர்கள் 100ற்கும் மேற்பட்டோர் அத்தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக 17 நாட்கள் தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பு செய்த வந்த நிலையில் 13.05.2018 அன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை தோட்டத்தை விட்டு வெளியேற்றுமாறும், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிக்கும் தோட்டநிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில்லை. இவ்வாறான பல்வேறு குறைபாடுகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

போராட்டத்தில் தொழிலாளர்கள் அத்தோட்ட நிர்வாகத்தினால் கவனிக்கப்படாத பல்வேறு விடயங்களை வாசகங்கள் எழுதிய பதாதைகள் ஊடாக வெளிகொண்டு வந்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த தோட்டத்தின் தொழிலாளர்களின் வருமானத்தை பாதிக்கும் வகையில் நல்ல விளைச்சலை தரக்கூடிய தேயிலை செடிகள் அடங்கிய தேயிலை மலையை மூடியிருப்பதாகவும், தோட்டத்தில் முறையான சுகாதாரத்தை பேணும் வகையில் வைத்தியர் ஒருவர் இல்லாததை சுட்டிக்காட்டியும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளில் பின்னடைவை ஏற்படுத்தியிருப்பதாகவும், தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களை இழிவுப்படுத்துவதாகவும், குறிப்பாக தோட்ட வெளிக்கள உத்தியோகத்தர் தொழிலாளர்களிடம் மிக தரம்குறைவாக நடந்துக் கொண்டதாகவும் இதற்கு எல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

DSC07139 DSC07143 DSC07201

அத்தோடு தோட்ட வெளிக்கள உத்தியோகத்தரை தோட்டத்தை விட்டு வெளியேற்றும் வரைக்கும் நாங்கள் பணிக்கு திரும்ப போவதில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் தொழிற்சங்கங்களும் இந்த விடயத்தை கண்டுக்கொள்ளாது அசமந்த போக்கினை கடைபிடித்து வருவதாக தொழிலாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டனர்.

எனவே தோட்ட நிர்வாகம், தொழிற்சங்கங்கள், அரசியல்வாதிகள் அணைவரும் முன்வந்து இதற்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் இதன்போது கேட்டுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!