முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுப்பு – சுற்றுலா பயணிகள் அவதானம்!!

இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுப்பு – சுற்றுலா பயணிகள் அவதானம்!!

http://sdsignshop.com/product/independent-contemporary-sign-for-sale-by-owner-blackred-yard-sign-24″t-x-30″w/ இலங்கையில் சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சியான பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் அதிக நீர் செல்வதனால் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிட முடியாது என ஹல்துமுல்ல பிரதேச சபையின் ஊடாக நீர்வீழ்ச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

source url பண்டாரவளை, பதுளை, ஹல்துமுல்ல போன்ற பகுதிகளில் தற்போது நிலவும் அடைமழை காரணமாக பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது.

buy provigil online with prescription இதன்காரணமாக சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என உத்தியோகத்தர் மேலும் தெரிவித்துள்ளார்.

பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சியில் பாரிய அளவு நீர் அதிகரித்துள்ளதுடன் ஏனைய நாட்களை விடவும் அதிக நீர் வெளியேறி செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.

DSC07019

நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். அவ்வாறு யாரும் செல்ல வேண்டாம் என அவர் எச்சரித்துள்ளார். குளிக்க சென்றால் உயிர் ஆபத்துக்கள் ஏற்பட கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிக்கு செல்வதனை தற்போது தவிர்க்குமாறு சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

02 (1)

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!