முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட நிர்வாக செயற்பாட்டுக்குழுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு!!

தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட நிர்வாக செயற்பாட்டுக்குழுக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு!!

can you buy prednisone over the counter in mexico மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்டம் நிர்வாகத்தின் செயற்பாட்டுக்குழு எதிராக மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்று நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் தொடரப்படவுள்ளது.இந்த வழக்கை மனித உரிமை மீறல் மற்றும் அடிப்படை உரிமை மீறல் அமுலாக்கத்தின் இலங்கைக்கான சர்வதேச செயலணி படை தொடரவிருக்கின்றது.

see this website இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று ஞாயிற்றுக்கிழமை 13.05.2018 அன்று மதியம் கொட்டகலையில் இடம்பெற்றது.

buy accutane uk online செயலணி படையின் செயலாளர் நாயகம் சவரியார் ஜேசுதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் செயலாளர் மேலும் தெரிவித்ததாவது,

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுக்கலை தோட்டத்தில் கடந்த 2016 ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அத்தோட்டமக்களுக்கு தலவாக்கலை அஞ்சல் அலுவலகத்தின் ஊடாக விநியோகம் செய்ய அனுப்பப்பட்ட 2 ஆயிரத்துக்கு அதிகமான முக்கிய கடிதங்களை தோட்ட நிர்வாகம் மக்களுக்கு வழங்காது மறைத்து வைத்துள்ளது.

குறித்த தோட்டத்தின் கொழுந்து மடுவத்தில் இந்த கடிதங்கள் கோணி பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மறைக்கப்பட்ட கடிதங்களில் இந்த தோட்டத்திற்கு கடிதங்களை வழங்க அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட நபருக்கான பதவி கடிதம் உட்பட வங்கிகள், அரச திணைக்களங்கள், தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் இருந்து அனுப்பப்பட்ட கடிதங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்கள் எம்மிடமுள்ளதாக ஊடகங்களுக்கு இதன் போது சுட்டிக்காட்டப்பட்டது.

அதேவேளையில் கட்டுக்கலை தோட்ட மக்கள் இந்த விடயம் தொடர்பில் தோட்டத்தின் வெளிக்கள உத்தியோகஸ்த்தர் ஒருவருக்கு எதிராகவும் கடந்த காலங்களில் ஆர்பாட்டமும் நடத்தினார்கள்.

ஆனால் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை. கடிதங்கள் தொடர்பில் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டு கடிதங்களை மக்கள் பெற வேண்டுமானால் சரியான தீர்வை நிர்வாகம் வழங்கவேண்டும் என மக்கள் ஒரு முகமாக இருக்கின்றார்கள்.

எனவே இந்த விவகாரம் தொடர்பில் தோட்டநிர்வாகம் மற்றும் பொலிஸார் பாராமுகமாக செயற்படும் நிலையில் செயலணி படையினரின் கவனத்துக்கு மக்கள் முறைப்பாடு செய்ததற்கு அமைவாக சரியான தீர்வை பெற வழக்கு தொடரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு அடுத்தவாரம் முதல்பகுதியில் வழக்கு பதிவு செய்யவுள்ளதாக தெளிவுப்படுத்தப்பட்டது.

அத்தோடு தோட்டப்பகுதிகளில் சிறுத்தை தாக்குதல் நடவடிக்கைக்கும், தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராகவும் வனவிழங்கு பாதுகாப்பு சபைக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் இது தொடர்பில் ஆராய்ந்து வருகிறது எனவும் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!