முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு!!

அட்டன் பூல்பேங்க் தோட்ட கந்தையா புரம் வீடமைப்புத்திட்டம் 20 ஆம் திகதி திறந்து வைப்பு!!

அட்டன் பூல்பேங்க் தோட்டத்தில் நீண்டகாலமாக வீடில்லா பிரச்சினையை எதிர்நோக்கி வந்த 20 தொழிலாளர் குடும்பங்களுக்கு அமைச்சர் திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப 20 தனிவீடுகள் அமைக்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இந்த வீடமைப்புத்திட்டம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது :

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் பூல்பேங்க் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 வீடுகளைப் பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இந்த 20 வீடுகளைக் கொண்ட தனிவீட்டுத்திட்டத்துக்குத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பி.வி.கந்தையாவை கௌரவிக்கும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப கந்தையா புரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

pool b 2

இந்த வீடமைப்புத்திட்டத்தில் உள்ளக பாதைகள் , குடிநீர் விநியோகம் , மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!