முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய்யை வழங்க தீர்மானம்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய்யை வழங்க தீர்மானம்!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய விலையில் மண்ணெண்ணெய்யை வழங்க நிதி அமைச்சர் மங்கள சமரவீர இணக்கம் வெளியிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் 980 மாணவர்களை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்கு உள்வாங்கவும் அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இதற்கமைய, அந்த மாணவர்களின் தகைமைகளை ஆராய்ந்து பல்கலைக்கு உள்வாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

Leave a Reply

error: Content is protected !!