முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > அன்னையரை போற்றி வணங்கினால் நாடு குடும்பம் சிறப்பாக அமையும்- பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஸ்பராஜ் தெரிவிப்பு!!

அன்னையரை போற்றி வணங்கினால் நாடு குடும்பம் சிறப்பாக அமையும்- பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஸ்பராஜ் தெரிவிப்பு!!

அன்னையரை போற்றி வணங்கினால் நாடு குடும்பம் சிறப்பாக அமையும் என பிரிடோ நிறுவன இணைப்பாளர் கே.புஸ்பராஜ்;
நானுஓயா காந்திமண்டபத்தில் முன்பள்ளி ஆசிரியை எஸ்.சங்கீத்தா எற்பாட்டில் நடைபெற்ற அன்னையர் தின நிகழ்வில்
கலந்துகொண்டு இதனை தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில் இன்று குடும்பத்தின் ஆணிவேராக கருதப்படும் அன்னையர் தற்போது பெருந்தோட்டதுறை உட்பட பலதுறைகளிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மூலம் நாட்டுக்;குள் கொண்டு வரும் வெளிநாட்டு செலவாணி மூலமாகவும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் அபிவிருத்திக்கும் பெரும் பங்களிப்பு செய்கிறார்கள்.

இதுவரை அவர்கள் குடும்பத்தை பாதுகாத்துவந்த அவர்களின் வகிபாகத்திற்கு மேலதிகமாக நாட்டினதும் குடும்பத்தினதும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்வதற்காக பல தியாகங்களை செய்ய வேண்டியதுள்ளதுடன் பெரும் சவால்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் அவர்களின் இந்த தியாகத்தையும் பங்களிப்பையும் சமூகம் தகுந்த முறையில் கௌரவிக்க வில்லை என்பதே உண்மையாகும்.

தொழிற்நுட்ப வளர்ச்சி அதிகரித்த தொலைகாட்சி பாவனை குடும்பங்களில் குடும்ப அங்கத்தவர் ஒன்று கூடி பேசும் கலாச்சாரம் கைவிடப்பட்டுள்ளமை என்பன மனித உறவுகளில் பாரிய பாதிப்புகளை எற்படுத்தி அது இறுதியில் அன்னைக்கு அளிக்க வேண்டிய கௌரவத்தை பாதிப்படையச் செய்யும் சமூகமாகவுள்ளது.

அன்னையரின் பங்களிப்புக்கு உரிய கௌரவம் அளிக்கும் மனப்பாங்கு உருவாக்கப்படுமானால் அது நிச்சயமாக முழு குடும்ப
அங்கத்தவர்களும் பொறுப்புணர்வுடனும் நன்றி உணர்வுடனும் செயல்படுவதை உறுதிசெய்யும். அப்போது குடும்பம் உயர்வடையும். அன்னையர் தினத்தை கொண்டாடும் கலாச்சாரத்தை பெருந்தோட்டபகுதியில் அறிமுகப்படுத்தி இந்த கருத்துக்களை பரவலாக்க பிரிடோ நிறுவனம் எடுத்த முயற்சி காரணமாக பெருந்தோட்டபகுதியில் தற்போது அன்னையர் தினம் கொண்டாடுவது ஒரு வழக்கமான விடயமாக ஆகிவிட்டது.

இதேவேளை இன்று இவ்வாறான நிகழ்வுகளை தோட்டங்களில் உள்ள சமூக அமைப்புகள் கோயில் நிர்வாகசபை முன்னெடுப்பது
பாரியமாற்றமாகும். இம்மாதம் முழுவதும் எல்லா தோட்டங்களிலும் அன்னையர் தினத்தினை கொண்டாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக பல மாற்றங்களை காணமுடியும் கடந்த காலங்களில் பிள்ளைக்கும் தாய்க்குமிடையில் இருந்த உறவில் பாரிய விரிச்சல் காணப்பட்டது.

20180512_153403 20180512_161122

தற்போது சிறுவர்கள் மத்தியில் இவ்வாறான நிகழ்வுகளை நடத்தும் போது தாய் தந்தையர்களை மதிக்கவும் குடும்ப கௌரவத்தை
காப்பாற்றவும் கற்றுக்கொடுக்கமுடியும்.. தற்போது நகர புறங்களில் அதிகமான பிள்ளைகள் தங்களுடைய தாய் தந்தையர்கள் வயதான பின்னர் முறையாக அவர்களை கவனிக்கப்படாமல் அனாதையில்லங்களில் சேர்க்கப்படுவதுடன் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர்.

மலையக பிரதேசங்களில் இவ்வாறான நிலையை காணமுடியாது காரனம் பிளைகள் மத்தியில் தெரடர்ச்சியாக விழிர்புணர்வு
வழங்கப்படுவதால் பிள்ளைகள் தங்களில் தாய் தந்தையர்களை பராமரிக்க கூடிய வாய்ப்புகள் ஏற்பற்றுள்ளன இவ்வாறான வேலைத்திட்டங்களை நிறுவனம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிள்ளைகள் தங்களின் தாய்மார்களுக்கு மலர்கள் கொடுத்து வாழ்த்துகள் தெரிவித்தமை குறிப்பிடதக்கது.
அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!