முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > கம்போடியாவில் பத்திரிகையாளர் கார்மேகத்தின் நூல் வெளியீட்டு விழா!!

கம்போடியாவில் பத்திரிகையாளர் கார்மேகத்தின் நூல் வெளியீட்டு விழா!!

தமிழர்களின் தொன்மையான வரலாற்றை அறிவியல் ரீதியாக ஆவணப்படுத்தவும் தமிழர்களுக்கும் தென்கிழக்காசிய நாடுகளுக்குமான வரலாற்று உறவையும் கடல் சார் வணிக வரலாற்றையும் நினைவு கூர்ந்து நடைபெறும் கம்போடியா உலகத்தமிழர் மாநாட்டில் பத்திரிகையாளர் அமரர் எஸ்.எம். கார்மேகம் “வாழ்வும் பணியும் என்ற வரலாற்று
ஆவணத்தை கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதா கிருஷ்ணன் வெளியிட்டு வைக்கின்றார்.

தென்புலத்தார் அமைப்பின் ஸ்தாபகர் ஒரிஸா பாலு மாநாட்டு குழு தலைவர் டாக்டர். மரு. தணிகாசலம் கம்போடியா தமிழ் பேரவைத் தலைவர் முத்தையா இராமசாமி தெற்கிழக்காசியா தமிழ்ச்சங்கத் தலைவர் விசாகன் மாநாட்டு செயலாளர் சீனிவாசராவ் ஆகியோர் முதன்மை பிரதிகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணித்த இராஜ ராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கம்போடிய புகழ்மிக்க அங்கோட் நகரில் நிர்மாணித்த திருத்தலத்தின் பெருமை கூறும் இந்த நிகழ்வை நினைவு கூர்ந்து மே மாதம் 19ம் மற்றும் 20ம் திகதிகளில் நடைபெறும் உலக தமிழர் மாநாட்டில் இலங்கை இந்திய பத்திரிகையாளரான அமரர். எஸ்.எம். அமரர் எஸ்.எம். கார்மேகம் “வாழ்வும் பணியும் நூல் வெளியிடப்படுவது சிறப்பு அம்சமாகும்.

மலையக வரலாற்று ஆவணப்பதிப்பாளரான எச்.எச். விக்கிரமசிங்க தொகுத்து பதிப்பித்திருக்கும் பத்திரிகையாளர் கார்மேகத்தின் வாழ்வும் பணியும் என்ற இந்த நூலில் பேராசிரியர் சோ.சந்திரசேகரன் இலங்கை இந்திய சமுதாய பேரவை உலகளாவிய
இந்திய வம்சாவளி மக்கள் மகாசபை முன்னாள் செயலாளர் நாயகம் ஏ.கே. சுப்பையா எம். நித்தியானந்தன் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத் தலைவர் தெளிவத்தை ஜோசப் கா.ப. லிங்கம் மல்லிகை சி.குமார் மு. சிவலிங்கம் முன்னாள் தினக்குரல் ஆசிரியர் வி. தனபாலசிங்கம் கனடா தமிழ் தகவல் ஆசிரியர் எஸ். திருச்செல்வம் அவுஸ்திரேலிய
லே.முருகன் ஆய்வாளர் எம்.என். சமீன் எம். வாமதேவன் நவமணி ஆசிரியர்

ஏ.எம். அமீம் மாத்தளை வடிவேலன் மலரன்பன் உள்பட முப்பத்தைந்து ஆளுமைகள் பேராசிரியர்கள் பத்திரிகையாளர்களின் ஆக்கங்கள்அரிய கட்டுரைகள் அடங்கியது.  மலையகத்தின் புகழ் பெற்ற எழுச்சித் தலைவர் பெ. சந்திரசேகரன் பற்றிய வரலாறு ஆவணத்தை வெளியிட்டதன் பின்னர் பத்திரிகையாளர் கார்மேகம் பற்றிய இந்த நூல் ஈழத்துப் பத்திரிகையாளர் ஒருவரின் வரலாற்றை ஆவணப்படுத்துவது சிறந்த முயற்சியாகும் என்று எழுத்தாளரும் விமர்சகருமான லண்டன் மாலி குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அவர்இலங்கையின் முன்னோடி பத்திரிகையாளர்களான கே.வி.எஸ். வாஸ்ரூபவ் பேராசிரியர் க.
கைலாசபதி எஸ்.டி. சிவநாயகம் க. சிவப்பிரகாசம் .வி. டேவிட் ராஜுஆர். சிவகுருநாதன் எஸ். நடராஜா ஆகியோர் பற்றிய ஆவணங்களையும் திரு. விக்கிரமசிங்க அவர்கள் பதிப்பிக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். என்றும்
குறிப்பிட்டுள்ளார்.

மலையக எழுத்தாளர்களுக்கு தமிழக பத்திரிகைகளில் களம் அமைத்துக் கொடுத்த முன்னோடி இதழான
கலைமகளின் தற்போதைய ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் ஆர். பிரபாகரன் தினக்குரல் வார வெளியீடு ஆசிரியர் பாரதி இராசநாயகம் மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் வெளியீட்டாளருமான
மாத்தளை கார்த்திகேசு ஆகியோர்களின் முன்னுரைகளுடன் வீரகேசரி புகைப்படப்பிடிப்பாளர்களான அமரர் ரோட்ரிகோஅமரர் மோசஸ் மற்றும் கே.விஜயபாலன் ஆகியோர் வழங்கிய கார்மேகம் தொடர்பான அபூர்வ நிழல்படங்களும்
இந்நூலுக்கு பெரும் கனதி சேர்த்திருக்கின்றன. சுமார் 360 பக்கங்களுடன் குமரன் பதிப்பகம் இந்நூலை செழுமையாக பதிப்பித்திருக்கின்றது.

இலக்கிய செயல்பாட்டாளரும் பிரபல ஆய்வாளருமான திரு. மு. நித்தியானந்தன்

“கார்மேகம் வீரகேசரி மூலம் நடத்திய மலையக சிறுகதைப் போட்டிகள் மலையக இலக்கிய வளர்ச்சியின் போக்கை நெறிப்படுத்திரூபவ் திசைக்காட்டி முன்னெடுத்து செல்லும் திராணியைக் கொண்டிருந்தன. மலையக எழுத்தாளர்கள் இன்று இலங்கையிலும் தமிழகத்திலும் சர்வதேச ரீதியிலும் அங்கீகாரம் பெற்று திகழ்வதற்கான நாற்றங்காலைத் நிர்மானித்தவர்.

கார்மேகம் மலையகம் என்ற உணர்வை எழுத்தில் இலக்கியத்தில்  பிரவகிக்க செய்த பகீரதன் அவர். 1962 ற்கும் 1970க்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நான்கு சிறுகதைப்

போட்டிகளை நடத்தியும் இலக்கிய விழாக்களை மலையக நகர்களில் பரவலாக ஏற்பாடு செய்து
அரசியல் தொழிற்சங்க வேறுபாடுகளுக்கு அப்பால் இலக்கியம் என்ற இராஜபாட்டையில் மலையக இளைஞர்களைத் திரள செய்த சாதனை கார்மேகத்தினுடையது. மலையக எழுத்தாளர் மன்ற உருவாக்கமும் அதன் காத்திரமான செயல்பாடுகளும் மலையக தேசிய உணர்வுக்கு சாணை பிடித்தன என்று கட்டுரையைக் குறிப்பிடுகிறார்.

Leave a Reply

error: Content is protected !!