முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தமிழ் மொழித்தின வலயமட்ட போட்டியில் கர்நாடகத்தில் முதலிடம்பெற்ற ம. மா. கொ விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள்!!

தமிழ் மொழித்தின வலயமட்ட போட்டியில் கர்நாடகத்தில் முதலிடம்பெற்ற ம. மா. கொ விவேகானந்தா வித்தியாலய மாணவர்கள்!!

கொத்மலை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கான தமிழ் மொழித்தின வலயமட்ட போட்டி பூண்டுலோயா இறம்பொடை இந்து கல்லூரியில் நடைப்பெற்றது .

இங்கு நடைப்பெற்ற இப்போட்டியில் ம. மா. கொ விவேகானந்தா மகா வித்தியாலய மாணவர்கள் .ஆசிரியர் வடிவேல் பத்மநாதன் வழிநடத்தலில் கர்நாடகம் போட்டியில் பங்குப்பற்றி முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர் ஆசிரியர் யூ. மிதுஷன் ளு. கஜரூபன் ளு. கவிதேவன் ளு. பிரவீனன் ஏ. ரூபகீதன் ளு. ஹரின்ராஜ் சு. ரவினா P. யுதேசிகா P. ஜீனாரொமானிமானிக்கா ளு. பூவரசி ளு. டயாளினி ளு. ஜனிஸா ஆகிய மாணவர்கள் பங்கேற்றனர்.

அத்தோடு பிரிவு கவிதை 5 ரொமானிக்கா மானிக்கா என்ற மாணவி முதலாம் இடத்தினை பெற்றுள்ளார் நாட்டார் பாடல் போட்டியில் ள ராஜ்குமார். N பிரபாஷினி ம நவினா p கபினேஸ்சினி ய.சகினா சந்திரகுமார் உள்ளிட்ட மாணவர்கள் ஆசிரியை கவிதா தலைமையில் கலந்துகொண்டு முதலாம் இடத்தினை பெற்றுகொண்டனர்.

பாடசாலை வளச்சிக்கும் மாணவர்களின் திறமைக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பாடசாலை அதிபர் சத்தியசீலன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை நிருபர்

Leave a Reply

error: Content is protected !!