நோர்வூட் பகுதியில் பாரிய சிறுத்தை புலியின் உடலம் மீட்பு!

0
103

நோர்வூட் மேற்பிரிவு தோட்டபகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்றை கொலை செய்த நிலையில் புல்கான் ஒன்றில் இருந்து மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் .26.05.2018.சனிகிழமை மாலை இந்த சிறுத்தையின் உடலம் மீட்கபட்டதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உணவு தேடி வந்த சிறுத்தைபுலி இறந்து கிடந்ததை நோர்வூட் மேற்பிரிவு தோட்ட காவலரால் இனங்கண்டு நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்ட போது குறித்த சிறுத்தை புலியின் தலைபகுதியில் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்யபட்டு புலியின் பற்களையும் நகங்களையும் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸாரினால் நல்லதண்ணி வனவிலங்க காரியாலய அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டு குறித்த சிறுத்தை புலியின் உடலம் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஒப்படைக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுத்தையின் உடலத்தை பொறுப்பேற்ற வனவிலங்கு அதிகாரிகள் பிரேத பரீசோதனைக்காக உடவலவையில் மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லபட்டுள்ளதாக நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

TIGER (7)

குறித்த சிறுத்தை புலியினை தாக்கி கொலைசெய்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ். சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here