மவுண்ட்வோர்னன் தோட்ட வீடமைப்புத்திட்டத்தின் பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வீடுகளின் திறப்புக்கள் கையளிப்பு : விரைவில் திறப்பு விழா!

0
92

மலையகத்தில் அமைச்சர் திகாம்பரத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத்திட்டத்தினால் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வடையுமென்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.பத்தனை பூங்கந்தை தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கி வந்த 55 குடும்பங்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப புதிய வீடுகள் மவுன்ட்வேர்ணன் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன . இந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு திறப்புக்கள் ( சாவிகள் ) வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பத்தனை மவுன்ட்வேர்ணன் தோட்டத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் லெட்சுமணன் , அமைப்பாளர் விஜயவீரன் தோட்ட அதிகாரிகள் , பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் உத்தியோகஸ்தர்கள் உட்பட பயனாளிகள் கலந்து கொண்டனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here