முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு!

மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவிப்பு!

buy gabapentin 300 mg online தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது, அதே போன்று மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இராமேஸ்வரத்தில் பேட்டியளித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 27.05.2018 அன்று இராமேஸ்வரம் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்:

best site to buy accutane தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையின் பிரச்சனை இல்லாமல் மீன்பிடிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 160க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் எல்லைதாண்டியதாக கூறி இலங்கை அரசு பறிமுதல் செய்துள்ளது, எனவே அவற்றை மீட்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், 61 நாட்கள் தடைகாலத்திற்கு பின் கடலுக்கு மீன்பிடிக்க செல்லகூடிய தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும், மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக தமிழக எதிர்கட்சிகள் ஒற்றை கருத்துடன் செயல்பட்டு வருகிறோம். தமிழக அரசு மத்திய அரசுக்கு வெறும் கடிதங்கள் மட்டும் எழுதினால் போதாது, அதே போன்று மத்திய அரசு இலங்கை அரசுடன் மீனவர்கள் பிரச்சனைக்கு கண்டிப்புடன் பேச வேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://paperbookintensive.org/auction-donations/ பேட்டி – ; ஜி.கே.வாசன் – தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!