முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > பலத்த காற்று – மின்சாரம் துண்டிப்பு -ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீடு சேதம்!!

பலத்த காற்று – மின்சாரம் துண்டிப்பு -ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீடு சேதம்!!

மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.அந்தவகையில், அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் சேமாகியுள்ளதுடன். மின் கம்பிகளும் அறுந்துள்ளன.

இதனால் 08.06.2018 அன்று இரவு 8 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பின் காரணமாக அக்கரப்பத்தனை, டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இல்லாமையினால் பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருவதோடு, வியாபாரிகள் உள்ளிட்ட வங்கிகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரைதகடுகள் அள்ளுண்டு போயுள்ளன. இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீட்டை சீர் திருத்தும் பணியை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளது.

Photo (3) Photo (5)

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!