முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது!!

4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் கைது!!

மொனராகலை எத்திமலை பகுதியில் 4 உள்நாட்டு துப்பாக்கிகளுடன் பத்து பேர் 10.06.2018 அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.மொனராகலை எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

35 முதல் 75 வயதுக்கிடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து மிருகங்களை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.

 

(க.கிஷாந்தன்)

Leave a Reply

error: Content is protected !!